அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பஸ் உள்பட வாகனங்கள் பறிமுதல்
அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பஸ் உள்பட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பஸ் உள்பட வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கோவை மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரி உதயகுமார் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஏ.அப்சல்கான், எஸ்.பாலமுருகன் ஆகியோர் திருச்சிரோடு, பாலசுந்தரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்த சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
அதிக நபர்களை ஏற்றியும், சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாமலும், சீட் பெல்ட் அணியாமலும் இயக்கிய 4 சுற்றுலா வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றிய 5 லாரிகளுக்கும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆட்டோ ரிக்ஷா வாகனங்கள், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஒரு தனியார் பஸ், 2 வேன்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அபராத தொகை, சாலை வரி ஆகியவை மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.