மணல் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்
கறம்பக்குடி அருகே மணல் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே உள்ள அய்யங்காடு, செல்வநாதபுரம், புலவன்காடு பகுதிகளில் உள்ள காட்டாற்றில் கடந்த சில மாதங்களாக லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று அதிகாலை காட்டாற்றில் இருந்து மணல் அள்ளி வந்த 4 லாரிகளை சிறைபிடிக்க முயன்றனர். இருப்பினும் அதில் ஒரு லாரியை மட்டும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். 3 லாரிகள் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
உதவி கலெக்டர்
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மணல் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட லாரியை உதவி கலெக்டர் கே.எம்.சரயு பறிமுதல் செய்து மழையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.