நாகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊதிய மாற்றம், சிறப்பு காலமுறை ஊதியம் ரத்து, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின்போது, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் முருகன் மீது நீதிபதியை விமர்சனம் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி முதல் முருகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பணிநீக்கம் செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை பணி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து உடனடியாக அரசு ஊழியர் முருகனுக்கு பணி வழங்கக்கோரி நாகை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் நேற்றுமுன்தினம் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், உயர்மட்ட குழு உறுப்பினர் அந்துவன்சேரல் ஆகியோர் பேசினர். தொடர்ந்து உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் அசோக்குமார் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலியை சேர்ந்த அரசு ஊழியர் முருகனுக்கு உடனடியாக பணி வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார்.