உண்டியலை உடைக்க முடியாததால் கோவிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் போலீசார் விசாரணை
போச்சம்பள்ளி அருகே உண்டியலை உடைக்க முடியாததால் கோவிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது கூச்சிக்கல்லூர் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சாமியை வணங்கி விட்டு செல்வார்கள். இக்கோவிலில் தினமும் பூஜைகள் செய்யப்படும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல மாலையில் சாமிக்கு பூஜை செய்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் திடீரென கோவிலில் இருந்து கரும்புகை வெளி வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சத்தம் போட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கோவிலுக்கு தீவைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதில் கோவிலில் இருந்த அம்மன்சிலை, 20-க்கும் மேற்பட்ட பட்டுபுடவைகள், பூஜைபொருட்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.