சூறாவளி காற்றுக்கு மின்கம்பிகள் அறுந்து விழுந்தன
சூறாவளி காற்றுக்கு மின்கம்பிகள் அறுந்து விழுந்தன இதனால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
சூறாவளி காற்றுக்கு மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 22 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பரவலாக சாரல் மழை பெய்தது. பின்னர் சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக கூடலூர் பகுதிக்கு வரும் உயர் அழுத்த மின்கம்பிகள் 4 இடங்களில் அறுந்து விழுந்தன.
இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அடியோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் பகுதி மின்வாரிய ஊழியர்கள் கூடலூரில் இருந்து தொரப்பள்ளி வழியாக வனத்துக்குள் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து வனப் பகுதியில் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் சென்றனர்.இந்த சமயத்தில் காட்டு யானைகள் மின்வாரிய ஊழியர்களை விரட்டியது. அங்கிருந்து அவர்கள் ஓடி தப்பினர்.
யானைகள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் மின்வாரிய ஊழியர்களால் உடனடியாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், இரவு நேரம் என்பதால் பாதுகாப்பு கருதி மின்வாரிய ஊழியர்கள் வனத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் நேற்று காலை 7 மணிக்கு மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் வனப்பகுதிக்கு சென்று அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு பணிகள் நிறைவுபெற்ற பின் மின்சார வினியோகம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 22 மணி நேரத்திற்கும் மேலாக கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.