அருப்புக்கோட்டையில் நிர்மலாதேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை: கம்ப்யூட்டர், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலாதேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனை நடத்தி, கம்ப்யூட்டர் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங் கர் கல்லூரி கணிதப்பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தூர் கோர்ட்டில் அனுமதி பெற்று, நிர்மலாதேவியை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக இந்த விசாரணை நடந்தது.
நேற்றைய விசாரணையின்போது, நிர்மலாதேவியின் சகோதரர் ரவி அவரை சந்திக்க வந்தார். கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் அவருக்கு நிர்மலாதேவியை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சந்திப்பு முடிந்ததும், சி.பி.சி.ஐ.டி.யின் ஒரு குழுவினர் அவரை அழைத்துக்கொண்டு, அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவ்யா நகரில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு ரவி முன்னிலையில் வீட்டை திறந்து சோதனை மேற்கொண்டனர். வீட்டில் உள்ள அறை, பீரோ உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டு மாடியிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன், தலையாரி தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை இரவிலும் நீடித்தது.
இந்த நிலையில் தேவாங்கர் கல்லூரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். காலை 11.30 மணிக்கு கல்லூரிக்கு சென்று செயலாளர் ராமசாமி, முதல்வர் (பொறுப்பு) பாண்டியராஜன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னையில் இருந்து மாலதி என்ற இன்ஸ்பெக்டரும் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.
விருதுநகரில் முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு தேவாங்கர் கல்லூரியில் நிர்மலாதேவி பணிக்கு சேர்ந்தபோது கல்லூரி செயலாளராக இருந்த சவுண்டையாவை வரவழைத்து விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது.
மேலும் இரவு 7.30 மணிக்கு நிர்மலாதேவியின் மாமனாரான பாண்டியனையும் வரவழைத்து விசாரித்தனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. அப்போது நிர்மலாதேவியின் கணவர் சரவண பாண்டியன் வக்கீல் ஒருவருடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்தார்.
சரவணபாண்டியன் மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் விவாகரத்துக்கு மனு கொடுத்து இருந்தார். ஆனால் பின்னர் இருவருக்கும் சமரசம் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குற்றச்சாட்டில் நிர்மலாதேவி சிக்கி கைதானதை தொடர்ந்து விவாகரத்து கோரி 2 நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலாதேவியின் கார் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை கவர் போட்டு மூடி வைத்திருந்தார். வீட்டினுள் சோதனை செய்த போலீசார் இரவு 9.45 மணி அளவில் வெளியே வந்து கவரை எடுத்துவிட்டு காரை திறந்து சோதனையிட்டனர். காரில் இருந்த ஒரு நோட்டை அவர்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றனர்.