எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்தது: நாமக்கல்லில் மாணவ, மாணவிகள் உற்சாகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

Update: 2018-04-20 22:30 GMT
நாமக்கல், 

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 311 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 882 மாணவர்கள், 10 ஆயிரத்து 708 மாணவிகள் என 22 ஆயிரத்து 590 மாணவ, மாணவிகளும், 501 தனித்தேர்வர்களும் என மொத்தம் 23 ஆயிரத்து 91 பேர் தேர்வு எழுதி வந்தனர்.

கடைசிநாளான நேற்று சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தவர்களில் 390 பேர் தேர்வு எழுதவரவில்லை. நேற்று கடைசிதேர்வு என்பதால், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த மாணவிகள் தங்கள் கைகளில் இருந்த தாள்களை கிழித்து எறிந்து வீசி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் சிலர் மை தெளித்தும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்துவதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்