பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன - கலெக்டர் தகவல்
பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என கலெக்டர் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ரூ.11 கோடியே 90 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 567 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.
இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் கடந்த 2011-12-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீடும் 300 சதுர அடியில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் முற்றிலும் மாநில அரசின் நிதியில் கட்டித்தரப்படுகிறது.
இந்த வீடு ஒரு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் ஒரு வராண்டாவுடன் மழைநீர் சேகரிப்பு வசதியுடன் கட்டப்படும். வீடுகட்ட ஒதுக்கப் படும் மொத்த தொகையான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் வீட்டின் கட்டுமான பணிகளுக்காக ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், சூரிய ஒளி சக்தி விளக்குகள் அமைத்திட ரூ.30 ஆயிரமும் பிரித்து ஒதுக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ரூ.11 கோடியே 90 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 567 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.