திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி பயிற்சி

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி பயிற்சி மேற்கொண்டனர்.

Update: 2018-04-20 22:30 GMT
திருவாரூர்,

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறை மற்றும் திருவாரூர் அரசு அருங்காட்சியகமும் இணைந்து உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடினர். திருவாரூர் அருகே திருகண்ணமங்கை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் குறித்து தமிழ்துறை மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி பயிற்சி மேற்கொணடனர். நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியர் தலைமை தாங்கினார்.

அப்போது திருகண்ணமங்கை கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. அங்குள்ள கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளும், கர்நாடக எழுத்துகளும் கலந்து பொறிக்கப்பட்டிருப்பதை விளக்கி கூறினார். மேலும் திருமலை நாயக்கர் மன்னர் செப்பு பட்டயம் வழங்கியிருப்பதை தெரிவித்தார். பின்னர் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்களையும், பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.

அப்போது அவற்றின் வரலாற்று விவரங்களை மாணவர்கள் கேட்டறிந்தனர். இதில் தமிழ்த்துறை தலைவர் வேல்முருகன், உதவி பேராசிரியர்கள் ஜவகர், குமார், சுபாஷ், ரமேஷ்குமார், செந்தாமரை, அறிவரசன், தமிழ்ச்செல்வன், வீரமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்