அம்மா திட்ட சிறப்பு முகாம்

பாலவாடி, ஜெ.பந்தாரஅள்ளி கிராமங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2018-04-20 22:00 GMT
பாப்பாரப்பட்டி, 

நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் பழனியம்மாள் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கேசவமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பாலவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்திய தாசில்தார் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முகாமில் வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர்கள் முனுசாமி, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஊராட்சி ஜெ.பந்தாரஅள்ளி கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலால் உதவி ஆணையர் மல்லிகா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தாசில்தார் அருண்பிரசாத் வரவேற்றார். சமுக பாதுகாப்பு தாசில்தார் தமிழரசன் முன்னிலை வகித்தார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உதவி ஆணையர் உத்தரவிட்டார். இதில் வருவாய் ஆய்வாளர் சம்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் மற்றும் வருவாய் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்