இலவச வேட்டி-சேலையை முறைகேடாக விற்று ரூ.5 கோடி மோசடி; மேலாளர் கைது
சென்னிமலை விசைத்தறி கூட்டுறவு சங்கத்தில் இலவச வேட்டி-சேலையை முறைகேடாக விற்று ரூ.5 கோடி மோசடி செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
சென்னிமலை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் இலவச வேட்டி-சேலையை முறைகேடாக விற்று ரூ.5 கோடியே 32 லட்சம் மோசடி செய்த மேலாளரை வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை அருகே உள்ள முகாசி பிடாரியூர் 1010 காலனியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மகன் என்.செந்தில்குமார் (வயது 52). இவர் சென்னிமலை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் முழு பொறுப்பு மேலாளராக இருந்தார். சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவியில் இருந்தாலும், செந்தில்குமார்தான் அனைத்து வரவு செலவுகளையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் பிச்சைமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கூலி முன்பணம் வழங்கியது, பாவு நூல் இருப்பு தொடர்பாக பெறப்பட்ட பணம், இலவச வேட்டி-சேலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அதில் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டறிந்தார்.
இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், ஈரோடு மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசுக்கு மனுவை அனுப்பி வைத்து, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சேலம் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி (பொறுப்பு, கோவை), இன்ஸ்பெக்டர் காளஸ்வரி (பொறுப்பு) ஆகியோர் உத்தரவின் பேரில், ஈரோடு வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், வேலுமணி, சீனிவாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், ஆல்வின் எபினேசர், பூங்கொடி மற்றும் ஏட்டுகள் இந்திராணி, தமிழ்ச்செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னிமலை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது மேலாளராக இருந்த என்.செந்தில்குமார் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கூலி முன்பணத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாவு நூல் நெசவு செய்யாமல் இருப்பதற்கும் பணத்தை பெற்று, அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலை திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி-சேலைகளை முறைகேடாக வெளி மார்க்கெட்டில் விற்றதும் தெரியவந்தது. மொத்தமாக மேலாளர் என்.செந்தில்குமார் ரூ.5 கோடியே 32 லட்சத்து 19 ஆயிரத்து 693 மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை முகாசிபிடாரியூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த என்.செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.4-ல் மாஜிஸ்திரேட்டு செல்வகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.