பிரபல ரவுடி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் விடுதலை
பிரபல ரவுடி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை விடுதலை செய்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தற்காலிக கடைகள் ஏலம் ஈரோடு முத்துவேலப்பவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரவி என்கிற ஸ்டீல் ரவியும் (வயது 48) கலந்துகொண்டார்.
இந்த ஏலம் நிறைவடைந்த பிறகு அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அந்த திருமண மண்டபத்திற்குள் நுழைந்தது. அவர்கள் ஸ்டீல் ரவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ஸ்டீல் ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் ஸ்டீல் ரவியை கொலை செய்ததாக மோகன்ராஜ், திராவிட செல்வன், சக்திவேல் ஆகியோர் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை ஈரோடு டவுன் போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஸ்டீல் ரவியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக அருண்பிரசாத், காட்டுசுப்பு ஆகியோரையும், கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த சுந்தர், மணி, ராஜ்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அருண்பிரசாத், காட்டுசுப்பு, சுந்தர், மணி, ராஜ்குமார், மோகன்ராஜ், திராவிடசெல்வன், சக்திவேல் ஆகிய 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.