நீடாமங்கலம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு
நீடாமங்கலம் அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர். இவருடைய மகன் சரண்ராஜ் (வயது24). இவர் கடந்த 17-ந்தேதி மாலை ஒளிமதி ஓடத்துறை கிராமத்திற்கு சென்று நீடாமங்கலத்தில் சாலை மறியல் நடத்த போவதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறு தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் மகன்கள் வக்கீல் தமிழ்ஸ்டாலின்பாரதி, இளந்தமிழன், மற்றும் வீரபாண்டி, செந்தமிழ் ஆகிய 4 பேரும் சேர்ந்து சரண்ராஜை கட்டையால் தாக்கினர். மேலும் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சரண்ராஜ் நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் தமிழ்ஸ்டாலின் பாரதி, இளந்தமிழன், வீரபாண்டி, செந்தமிழ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு
நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ராஜ்குமார் (20). இவர் கடந்த 17-ந்தேதி ஒளிமதி ஓடத்துறை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது சரண்ராஜ் மற்றும் இளமாறன், வினோத் ஆகிய 3 பேரும் துண்டு பிரசுரம் ஒன்றை கொடுத்தனர். அதனை ராஜ்குமார் வாங்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கம்பியால் ராஜ்குமாரை தாக்கினர். இதில் காயமடைந்த ராஜ்குமார் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராஜ்குமார் நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் சரண்ராஜ், இளமாறன், வினோத் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.