ஓட்டேரியில் மொட்டை மாடி வழியாக வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது
ஓட்டேரியில் மொட்டை மாடி வழியாக வீடு புகுந்து நகை-பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை ஓட்டேரி பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் திண்டிவனம் சென்று விட்டு, நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அவர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்ற போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் ரூ.4,500 திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை, பணம் மாயமாகி இருப்பது எப்படி? என தெரியாத நிலையில் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ‘மர்மநபர்கள், மொட்டை மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி இருப்பது’ தெரிந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஆரோக்கிய சாமி (37) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வள்ளி வீட்டில் திருடிய நகையை தான் வேலை செய்து வரும் கடையில் புதைத்து வைத்து இருந்ததும், திருடிய பணத்தில் ஆயிரம் ரூபாய்க்கு குடித்து விட்டதும் தெரிந்தது.
அவரிடம் இருந்து ரூ.3,500 மற்றும் 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.