பள்ளி பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் இலவச கட்டாய கல்வி சட்டம், பள்ளி பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் இலவச கட்டாய கல்வி சட்டம், பள்ளி பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக் டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும், முதன்மைக்கல்வி அதிகாரி, தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களை கொண்டு 10 பள்ளிகளுக்கு ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து, குறைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மைப்பள்ளிகள் தவிர மற்ற அனைத்து தனியார் பள்ளிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்துவது குறித்து ஒருங் கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, இக்குழுக்கள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.