கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் களியக்காவிளை போலீசாரும், மாவட்ட உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் தேங்காய் மற்றும் கருப்பட்டி மூடைகள் இருந்தது தெரியவந்தது. இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவில் மேற்பரப்பில் இருந்த மூடைகளை அப்புறப்படுத்தியபோது, அடியில் இருந்த மூடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 12 மூடை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை டெம்போவுடன் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் டெம்போவை ஓட்டிவந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சிபு(வயது 36) மற்றும் பைஜூ(39) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை யார்?–யார்? விற்பனை செய்கிறார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.