திருப்பூரில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
திருப்பூர்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். எச்.ராஜாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.ராஜாவின் உருவ பொம்மையை நடுரோட்டில் எரித்தனர். இதில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை தலைமையிலான போலீசார் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் அனுமதியின்றி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் உள்ளிட்ட 35 பேர் மீது திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.