ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு குறித்து அரசுக்கு புகார் வரவில்லை

மராட்டியத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு குறித்து அரசுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று மந்திரி சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

Update: 2018-04-17 22:04 GMT
மும்பை,

மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், பீகார் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 11 மாநிலங்களில் கடுமையாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வங்கிகள், ஏ.டி.எம் எந்திரங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் பணப்புழக்கம் பெருமளவில் குறைந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை மராட்டிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் மறுத்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இதுவரை பணத்தட்டுப்பாடு குறித்தோ அல்லது ஏ.டி.எம்.மில் பணம் இல்லாதது குறித்தோ மராட்டிய அரசுக்கு எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும் பொதுமக்கள் இதுகுறித்து எங்களிடம் புகார் கொடுக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. புகார் வருமாயின், இதை தீவிரமான பிரச்சினையாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

மேலும் அரசு சார்பில் ரிசர்வ் வங்கியிடம் ஏ.டி.எம். பண வினியோகம் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை வியாழக்கிழமை(நாளை) தான் கிடைக்கும். அதன்பின்னரே மராட்டியத்தில் பணத்தட்டுப்பாடு உள்ளதா, இல்லையா என்ற விவரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்