பால்கி தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் ஊர்வலத்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கதறி அழுகை
பால்கி தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் ஊர்வலத்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கதறி அழுதார்.
பெங்களூரு,
கர்நாடகம்-தெலுங்கானா எல்லையில் பீதர் மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் பால்கி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்குமாறு அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிரகாஷ் கன்ட்ரே கோரிக்கை விடுத்து இருந்தார். அவருக்கு கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் தனக்கு எப்படியும் டிக்கெட் கிடைத்துவிடும் என்று மிகுந்த நம்பிக்கையில் பிரகாஷ் கன்ட்ரே இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜனதாவின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் பால்கி தொகுதியில் சித்ரமா என்பவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் கன்ட்ரே மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பால்கியில் நேற்று ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிரகாஷ் கன்ட்ரே கதறி அழுதார்.
பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் மேலிட தலைவர்களை கண்டித்து, பிரகாஷ் கன்ட்ரேவின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் கதறி அழுத தங்களின் தலைவர் பிரகாஷ் கன்ட்ரேவுக்கு அவர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். ஆயினும் பிரகாஷ் கன்ட்ரேவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
பால்கி தொகுதியில் பிரகாஷ் கன்ட்ரேவுக்கு டிக்கெட் கொடுத்தே தீர வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். டிக்கெட் வழங்காவிட்டால் பா.ஜனதாவை விட்டு விலகுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.