தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் ஓட்டுனர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-04-17 23:00 GMT
கரூர்,

சுற்றுலா வேன்களுக்கு வழித்தட அனுமதி வழங்க வேண்டும். வேன்களில் இருக்கை வசதியை அதிகரிக்க அரசு அனுமதிக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேட்ஜ் அனுமதி பெற்றதும் ஓட்டுனர் நலவாரியத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகனங்களை அங்குள்ளவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் வாகனங்களுக்கு சேதமடைவதோடு மட்டுமில்லாமல் பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது.

கர்நாடக மாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வரும் போது அரசு பாதுகாப்பு வழங்குகிறது. கர்நாடக வாகனங்கள் மீது தாக்கப்படுவதில்லை. அதுபோல தமிழக வாகனங்களுக்கு கர்நாடக மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அனைத்து சுற்றுலா வாகன சங்கங்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ராமஜெயம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில துணை தலைவர் செல்லமுத்து, பொது செயலாளர் கார்த்திகேயன், கரூர் மாவட்ட நிர்வாகிகள் மணிவண்ணன், மதுசூதனன் உள்பட ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்