காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து முற்றுகையிடும் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாளை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது.
நாமக்கல்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டு தொகையை இனியும் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.
கடுமையான வறட்சி நிலவும் சூழலில் சிறு, குறு விவசாயிகள் என பிரித்து பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை திரும்பபெற வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள டிராக்டர் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக விவசாயிகளை புறந்தள்ளி வருகிறது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி 19-ந் தேதி (நாளை) கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். வெற்றி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கோரிக்கை மனுவை விவசாயி சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் வழங்கினர்.
முன்னதாக விவசாயிகள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, பொருளாளர் நல்லதம்பி, இணை செயலாளர் சதாசிவம், சேலம் மாவட்ட தலைவர் பழனிமுருகன், செயலாளர் பெரியண்ணன் உள்பட விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.