மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: வனப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை

குன்னூர் வனப்பகுதியில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் மாவோயிஸ்டு தடுப்பு சிறப்பு படை போலீசார் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2018-04-17 22:30 GMT
குன்னூர்,

தமிழக- கேரள எல்லையோர கிராமங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் மாவோயிஸ்டு தடுப்பு சிறப்பு படை போலீசார் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாவோயிஸ்டு தடுப்பு சிறப்பு படையை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் குன்னூர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்கள் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ளதா என லேம்ஸ்ராக் வனப்பகுதி முதல் கல்லார் வரை 12 கிலோ மீட்டர் தூரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள ஆதிவாசி கிராமங்களுக்கு சென்றனர். அவர்கள் ஆதிவாசி மக்களிடம் புதிய நபர்கள் யாராவது தனியாகவோ, கும்பலாகவோ ஊருக்குள் வந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

மேலும் செய்திகள்