சர்ச்சைக்குரிய பன்வெல் மாநகராட்சி கமிஷனர் சுதாகர் ஷிண்டே உள்பட 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
சர்ச்சைக்குரிய பன்வெல் மாநகராட்சி கமிஷனர் சுதாகர் ஷிண்டே உள்பட 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.
மும்பை,
பன்வெல் மாநகராட்சி கமிஷனர் சுதாகர் ஷிண்டே சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தார். அவரது அதிரடி செயல்பாடுகள் மாநகராட்சி அதிகாரம் செலுத்தி வரும் பா.ஜனதா கவுன்சிலர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மாநகராட்சியில் கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில் அவரை பணி இடமாற்றம் செய்யக்கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில், சுதாகர் ஷிண்டேக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. எனவே சுதாகர் ஷிண்டே தான் பன்வெல் மாநகராட்சி கமிஷனராக நீடிப்பார் என கருதப்பட்ட நிலையில், நேற்று திடீரென அவரை மாநில அரசு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதன்படி சுதாகர் ஷிண்டே மகாத்மா ஜோதிபா புலே ஜன ஆரோக்ய யோஜனா துறையின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். பன்வெல் மாநகராட்சியின் புதிய கமிஷனராக நாந்தெட் வாகலா மாநகராட்சி கமிஷனராக இருக்கும் கணேஷ் தேஷ்முக் நியமிக்கப்பட்டு உள்ளார். புனே மாவட்ட கலெக்டராக இருந்த சவுரவ் ராவ் புனே மாநகராட்சி கமினராக மாற்றப்பட்டு உள்ளார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.