திருவாரூரில் உதவி கலெக்டர் கணவரை தாக்க முயன்றவர் கைது
திருவாரூரில் உதவி கலெக்டர் கணவரை தாக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் பவித்திரமாணிக்கம் ஜி.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது45). இவருடைய மனைவி முத்துமீனாட்சி. இவர் திருவாரூரில் உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். நன்னிலம் வி.கே.எம். நகரை சேர்ந்த ஜாகீர்உசேன் (40). இவர் உள்ளூர் பத்திரிகை நடத்தி வருகிறார். இவர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சியை பற்றி தவறான செய்தியை உள்ளூர் பத்திரிகையில் வெளியிடுவதாக கூறி ரூ.9 லட்சம் கேட்டு செந்தில்குமாரை மிரட்டினார்.
கைது
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி காலை மாவட்ட விளையாட்டு அலுவலக நீச்சல் குளம் அருகில் செந்தில்குமார் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜாகீர்உசேன் பணம் கேட்டு செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரை இரும்பு கம்பியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக செந்தில்குமார் தப்பினார். இதுகுறித்து செந்தில்குமார் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர்உசேனை கைது செய்தனர்.