கோவில் விழாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது
மடத்துக்குளம் அருகே கோவில் திருவிழாவின் போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளத்தை அடுத்த மேற்கு நீலாம்பூர் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் இருபிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சேர்ந்த சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவில் மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்தைக்கு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
ஆனாலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மீண்டும் கோவை-நாகப்பட்டினம் தேசியநெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அருகே நால்ரோடு பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது என்று கோரிக்கை வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மடத்துக்குளம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.