இஸ்ரோவில் 171 உதவியாளர் பணிகள்
இஸ்ரோவில் இளநிலை உதவியாளர் பணிக்கு 171 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ (ISRO) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஆய்வு மையத்தில் ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் பணிக்கு 166 இடங்களும், ஸ்டெனோகிராபர் பணிக்கு 5 இடங்களும் உள்ளன. இவை தற்காலிக பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா, புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத் போன்ற இடங்களில் உள்ள இஸ்ரோ மையங்களில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30-4-2018-ந் தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
அறிவியல், கலை, வர்த்தகம், நிர்வாகம், கணினி சார்ந்த பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வணிகவியல், செகரட்டேரியல் பிராக்டிஸ் போன்ற டிப்ளமோ படித்து, ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கவும், தட்டச்சு செய்யவும் தெரிந்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 12-8-2018 அன்று எழுத்துத் தேர்வு நடை பெறுகிறது. ஸ்டெனோகிராபர்களுக்கு தட்டச்சு திறமைத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-4-2018-ந் தேதியாகும். கட்டணம் 2-5-2018-ந் தேதிக்குள் செலுத்தலாம், 12-8-2018 அன்று எழுத்துத் தேர்வு நடக்கிறது,
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.isro.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்,