வக்கீல் வீட்டில் சாமி சிலைகள் கண்டுபிடிப்பு போலீசார் விசாரணை

ராசிபுரம் அருகே வக்கீல் வீட்டில் சாமி சிலைகள் கண்டுபிடிப்பு போலீசார் விசாரணை

Update: 2018-04-15 22:45 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை டாக்டர் ஒருவர் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் வழக்கு நடத்தி வந்தார். அந்த வக்கீல் சில ஆவணங்களை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலையில் டாக்டரை சேர்ந்த சிலர் வக்கீல் வீட்டுக்கு சென்றனர். அப்போது வக்கீல் வீட்டில் இல்லை. இதனிடையே வக்கீல் வீட்டில் 3 மரப்பெட்டிகளில் சாமி சிலைகள் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுப்பற்றி தகவல் அறிந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் முருகன், வள்ளி, தெய்வானை, கால பைரவர், விநாயகர் சிலைகள், நவக்கிரக சிலைகள் என 16-க்கும் மேற்பட்ட புதிய கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சாமி சிலைகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ராஜகணபதி கோவிலுக்கு வாங்கி வரப்பட்டது என வீட்டில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் சாமி சிலைகள் எப்படி வந்தது?, இது ராஜகணபதி கோவிலுக்கு வாங்கி வரப்பட்ட சிலைகள் தானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்