3 போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு: புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு
கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திடீரென ஆய்வு செய்தார்.
பெரம்பூர்,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை திடீரென கொடுங்கையூர், வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி. நகர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த போலீஸ் நிலைய வளாகங்களில் வழக்குகளில் சிக்கிய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளதையும், சில இடங்களில் சுத்தம் இல்லாமல் இருப்பதையும் கண்டார்.
அப்போது அவர், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்ற வாகனங்களை ஏலம் விட்டு, உடனடியாக அப்புறப்படுத்தி போலீஸ் நிலையத்தையும், போலீஸ் நிலைய வளாகங்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என அறுவுறுத்தினார்.
மேலும் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி புகார்களை பெற்று, இழுத்தடிக்காமல் உடனுக்குடன் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் பகுதிகளில்தான் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து, குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது அவருடன் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சியாமளாதேவி, எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, சரவணன், மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.