ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ வாகன பிரசாரம் கோவில்பட்டியில் நாளை தொடங்குகிறார்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் வைகோ வாகன பிரசார பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பிரசாரத்தை கோவில்பட்டியில் நாளை தொடங்குகிறார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாகன பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரசார பயணம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, 18, 21, 22 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடக்கிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாளை மாலை 4 மணிக்கு கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 4.30 மணிக்கு எட்டயபுரம், 5.30 மணிக்கு புதூர், 6.15 மணிக்கு நாகலாபுரம், 6.45 மணிக்கு விளாத்திகுளம், 7.15 மணிக்கு சூரங்குடி, 7.30 மணிக்கு வைப்பாறு, 7.45 மணிக்கு குளத்தூர் பகுதிகளில் வாகன பிரசாரம் செய்கிறார்.
18-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கரிசல்குளத்தில் தொடங்கி 4.30 மணிக்கு காமநாயக்கன்பட்டி, 5.15 மணிக்கு பசுவந்தனை, 5.45 மணிக்கு ஓட்டப்பிடாரம், 6.30 மணிக்கு புதியம்புத்தூர், 7.30 மணிக்கு குறுக்குச்சாலை ஆகிய பகுதிகளில் வைகோ வாகன பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து 21-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு செய்துங்கநல்லூர், 4.30 மணிக்கு ஆழ்வார்திருநகரி, 5 மணிக்கு நாசரேத், 5.30 மணிக்கு பேய்க்குளம், 6 மணிக்கு சாத்தான்குளம், 6.30 மணிக்கு மெஞ்ஞானபுரம், 7 மணிக்கு பரமன்குறிச்சி, 7.30 மணிக்கு உடன்குடி ஆகிய பகுதிகளில் வாகன பிரசாரம் செய்கிறார்.
22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டம், 4.30 மணிக்கு ஏரல், 5 மணிக்கு வடக்கு ஆத்தூர், 5.15 மணிக்கு தெற்கு ஆத்தூர், 5.45 மணிக்கு ஆறுமுகநேரி, 6.15 மணிக்கு காயல்பட்டினம், 6.45 மணிக்கு திருச்செந்தூர், இரவு 7 மணிக்கு ஆலந்தலை, 7.15 மணிக்கு குலசேகரன்பட்டினம், 7.45 மணிக்கு மணப்பாடு, 8 மணிக்கு பெரியதாழை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
அதன்பிறகு 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தெரிவித்து உள்ளார்.