பெண்களுக்கான வேலைவாய்ப்பு காடை வளர்ப்பு முறை
தமிழகத்தில் காடை வளர்ப்புத்தொழில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
உற்சாகமாக உழைக்கத் தயாராக இருக்கும் பெண்கள் வீடுகளில் குறைந்த இடத்திலேயே காடையை வளர்த்து அதிக வருவாய் ஈட்ட முடியும். காடை வளர்ப்புத் தொழிலின் பின்னணி சரித்திரத்தோடு தொடர்புடையது. 2-ம் உலக போர் நடந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டது. அதைபோக்க அங்கு காடை வளர்ப்புத்தொழில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஜப்பானில் காடை முட்டை காசநோய் எதிர்ப்பு மருந்தாக கருதப்பட்டதால் காடை வளர்ப்புத் தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் 1974-ம் ஆண்டு காடை வளர்ப்பு அறிமுகமானது. இந்திய அரசு வன விலங்குகள் பாதுகாப்பு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு காடைகளை வீட்டில் வளர்க்க அனுமதி அளித்துள்ளது.
காடை இனங்களில் இந்திய காடுகளில் வாழும் காடை, ஜப்பானிய காடை, நந்தனம் காடை-1, நந்தனம் காடை- 2, பாப்வெள்ளை காடை, கலிபோர்னியா காடை, மலையில் வாழும் காடை, நியூ சிலாந்து காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, நியூகினியா மலைக்காடை போன்றவை குறிப்பிடத்தக்கவை. காட்டு இனம், பிரிட்டிஷ் இனம், இங்கிலீஷ் வெள்ளை இனம், மஞ்சூரியன் தங்க இனம், டக்ஸ்சிடோ இனம் போன்றவை ஜப்பானிய வகை காடைகளாகும்.
காடை இனங்களில் பாப் வெள்ளை குடும்பத்தை சேர்ந்தவை கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் காணப்படும். இதில் 20 பிரிவுகள் உள்ளன. அவைகளில் பாப் வெள்ளை, கருப்பு நிற தொடையுடைய பாப் வெள்ளை, கிரஸ்ட்டு பாப் வெள்ளை, மாங்கிடு பாப் வெள்ளை முதலிய இனங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த இனங்கள் பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்ப டுகின்றன.
கலிபோர்னியா காடை இனம் அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. அவற்றில் 12 வகைகள் உள்ளன. இதில் கலிபோர்னிய வேலி காடை, கேம்பல்ஸ் காடை ஆகியன முக்கிய இனங்களாகும். இவ்விரு இனங்களும் உருவத்தில் ஒரே மாதிரி தோன்றும். இவைகளின் நெஞ்சுப் பகுதி இறக்கை ஊதா கலந்த சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பகுதி இறகு செதில் போன்றும் தோற்றமளிக்கும். கேம்பல்ஸ் காடைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கோழி இன உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் அதிக அளவில் ஜப்பானிய காடை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1987-ம் ஆண்டு நந்தனம் காடை 1-என்ற இனமும், 1993-ம் ஆண்டு மேம்படுத்தப் பட்ட உற்பத்தி திறன்கொண்ட நந்தனம் காடை-2 என்ற புதிய இனமும் அறிமுகப்படுத் தப்பட்டது. பின்பு உற் பத்தித் திறனை அதிகப்ப டுத்தும் வகையிலும், தொழில் முனைவோருக்கு அதிக எண்ணிக்கையில் காடை குஞ்சுகளை விற்பனை செய்திடும் வகையிலும் தொடர் ஆராய்ச்சியின் மூலம் நந்தனம் காடை 3 என்கிற இனம் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது.
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின அறிவியல் உயர்கல்வி மையத்தில் குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டு காடை குஞ்சுகள் பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு ஆராய்ச்சி மற்றும் சிறந்த இனப்பெருக்க முறைகளை பின்பற்றி கடந்த 2006-ம் ஆண்டு நாமக்கல் காடை-1 என்ற இனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வீரிய இன இறைச்சிக் காடையாகும். ஆண் காடை 313 கிராம் எடை கொண்டதாகவும், பெண் காடை 346.80 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும். இவைகளின் முட்டைகளை காலை மற்றும் மாலையில் சேகரித்து அடைகாப்பானில் வைத்து குஞ்சு பொரிக்க செய்யலாம். குஞ்சு பொரிக்கும் விகிதம் 50 முதல் 53 சதவீதம் அளவில் உள்ளது.
இதன் இளம் குஞ்சுகளை ஆழ்கூள முறையில் வளர்ப்பதை விட கூண்டு முறையில் வளர்த்தால் இறப்பு விகிதம் குறையும். முட்டை உற்பத்திக்கான காடையை 10 மாதம் வரையில் வளர்க்கலாம். இதன் முட்டையின் எடை 9 முதல் 13 கிராம் வரை இருக்கும்.
கொட்டகை அமைத்தல்
பண்ணையாளர்கள் கொட்டகை அமைக்க விரும்பினால் மேடான இடத்தை தேர்வு செய்திட வேண்டும். மழைபெய்தால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கக்கூடாது. குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதி இருக்கவேண்டும். கொட்டகையை கிழக்கு மேற்காக அமைத்திட வேண்டும். ஆழ்கூள முறை, கூண்டு முறை ஆகிய 2 முறைகளில் வளர்க்கலாம். கொட்டகையின் உள்ளே குளிர்காற்று நேரடியாக வீசினால் காடைகள் பாதிக்கப்படும். காற்று வேகமாக வீசி அவைகளை தாக்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
குறைந்த மூலதனத்தில் காடை பண்ணை ஆரம்பிக்க நினைப்பவர்கள் கீற்றினால் வேயப்பட்ட கொட்டகையை அமைத்துக்கொள்ளலாம். இதனால் வெயில் காலத்தில் கொட்டகையின் உள்ளே குளுமையாக இருக்கும். அதிக செலவும் ஆகாது. அதே நேரத்தில் எளிதில் தீப்பற்ற வாய்ப்பு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகாத வகையில் அமைக்க வேண்டும். அதிக நாட்கள் நீடித்து உழைக்க கூடிய பண்ணையை அமைக்க நினைப்பவர்கள் லைட்ரூப் கொண்டு கொட்டகை அமைக்கலாம். கீற்று கொட்டகையைபோல் இதை அடிக்கடி மாற்றவேண்டி வராது.
பெரிய அளவில் பல காலத்திற்கு நீடித்து இருக்கும் வகையில் காடை பண்ணை கொட்டகை அமைக்க நினைப்பவர்கள் சீமை ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரை கொண்டு கொட்டகை அமைக்கலாம். பண்ணை ஆரம்பிக்கும் சமயத்தில் இதற்கு அதிக மூலதனம் தேவைப்படும்.
ஆழ்கூள வளர்ப்பு முறை
இறைச்சிக்காக ஜப்பானிய காடையை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். இதில் ஒரு சதுர அடிக்கு 5 காடைகள் வரை வளர்க்க முடியும். குஞ்சுகளை முதல் 2 வாரத்திற்கு ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டு களுக்கு மாற்றி ஆறுவாரம் வரை வளர்க்கலாம். 2 வாரத்திற்கு மேல் ஆழ்கூள முறையில் வளர்த்தால், அவை அலைந்து திரிந்து உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி எடை குறைவாகவும், அதிக தீவன செலவையும் ஏற்படுத்தும். எனவே முதல் 2 வாரம் ஆழ்கூள முறையிலும், பின்னர் கூண்டுகளுக்கு மாற்றியும் வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும். இதில் தீவனம் மற்றும் குடிநீருக்கென்று தொட்டிகளும் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டியை குஞ்சுகள் உள்ளே இறங்கிவிடாத வகையில் அமைத்திட வேண்டும்.
கூண்டு வளர்ப்பு முறை
இறைச்சிக்காக காடைகளை குஞ்சு பொரித்த நாள் முதல் விற்பனை வயது வரை கூண்டுகளில் வளர்க்கலாம். முட்டை காடைகளையும் கூண்டு முறையில் வளர்க்கலாம். இதில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் காடை குஞ்சுகளை 2 வாரம் வரை 3 அடி நீளமும், 2 அடி அகலமும் உள்ள கூண்டுகளில் ஒரு கூண்டுக்கு 100 குஞ்சுகள் வரை வளர்க்கலாம். 3 முதல் 6 வாரத்திற்கு பிறகு 4 அடி நீளமும், 2 அடி அகலமும், 8 அங்குல உயரமும் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 60 காடைகள் வரையில் வளர்க்கலாம்.
அடுத்த வாரம்: காடை குஞ்சு உற்பத்தி செய்யும் முறை
தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.
குஞ்சுகள் கிடைக்குமிடம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் ஜப்பானிய காடைகள், வெள்ளை காடைகள் மற்றும் வெள்ளை மார்பு கொண்ட காடைகள் கிடைக்கின்றன. இதன் குஞ்சுகள் பொரித்த முதல் நாள், முதல் ஒரு வாரம், 2 வாரம் மற்றும் 21 நாட்கள், 28 நாட்கள் என்று பல்வேறு நாட்கணக்குக்கு தக்கபடி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
காடை வளர்ப்பு பிரபலமாக காரணம்
மிக குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடைகளை வளர்க்கலாம். கோழி வளர்ப்பை போன்று இதற்கு அதிக அளவு முதலீடு தேவையில்லை. இவைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், எல்லா தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரும். காடை நான்கு முதல் ஐந்து வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகிவிடும். இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே வருமானத்தை பெற முடியும். காடையில் 70 முதல் 74 சதவீதம் வரை இறைச்சி இருக்கும். மேலும் ஒரு காடை 6 வார காலத்தில் 500 கிராம் அளவிலேயே தீவனம் உட்கொள்வதால் தீவன செலவு குறைகிறது.
காடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், அலகு வெட்டுதல், தடுப்பூசி அளித்தல் போன்ற பராமரிப்பு செலவு அவ்வளவாக இல்லை. அதோடு கோழிகளை போன்று காடைகளை நோய் கிருமிகள் எளிதில் பாதிப்பதில்லை. இதனால் மருத்துவ செலவும் குறைகிறது. முட்டைக்காக வளர்க்கப்படும் காடைகள் ஆறுவார காலத்தில் முட்டையிட தொடங்கி விடுகின்றன. காடை முட்டைகளில் அதிக புரதம் இருப்பதால் அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கான விற்பனை வாய்ப்பு அதிகமுள்ளது. ஒரு காடை ஆண்டுக்கு 220 முதல் 230 முட்டைகள் வரை இடுகின்றன. மேலும் 5 வாரங்களில் ஒரு காடையில் இருந்து 220 கிராம் இறைச்சியும் கிடைக்கிறது.