சவுதி அரேபிய அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நாநர் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம் குறித்தது கிடையாது
சவுதி அரேபிய அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நாநர் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம் குறித்தது கிடையாது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார்.
மும்பை,
சவுதி அரேபிய அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நாநர் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம் குறித்தது கிடையாது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார்.
உத்தவ் தாக்கரே விமர்சனம்
ரத்னகிரி மாவட்டம் நாநரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் அமைக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட லாம் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ரத்னகிரியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் அமைக்க சவுதி அரேபிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக மத்திய அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சுற்றுச்சூழலை பாதிக்கும் இது போன்ற திட்டத்தை எந்த சூழ்நிலையிலும் சிவசேனா செயல்படுத்த விடாது என கூறினார். மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்தை மக்கள் மீது திணிக்க மாட்டேன் என முன்னர் உறுதி அளித் திருந்ததை சுட்டிக்காட்டிய அவர் முதல்-மந்திரியின் பேச்சுக்கு மத்திய அரசில் மதிப்பு இல்லை என கடுமையாக விமர்சித்தார். தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய மக்களுக்கு துரோகம் செய்துவிட் டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வேறொரு திட்டம்
இந்தநிலையில் இந்து மில் பகுதியில் அம்பேத்கர் நினைவக வளாகத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேற்கு கடலோர பகுதிகளில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைப்பது தொடர்பாகவே சவுதி அரேபிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கும் நாநர் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
அதே நேரத்தில் நாநர் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கபடும் என கூறப்படும் தகவல்கள் தவறானவை. இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.