வடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதல்; வாலிபர் பலி

வடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2018-04-14 21:15 GMT
வடலூர்,

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் பிரவீன்குமார்(வயது 24). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் மந்தாரக்குப்பத்தில் இருந்து வடலூருக்கு புறப்பட்டார். விருத்தாசலம்–கடலூர் சாலையில் வடலூர் தொழிற்பேட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த மினிலாரியும், பிரவீன்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய பிரவீன்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதுகுறித்து அவருடைய உறவினர் வீரவேல் வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்