காஞ்சீபுரம் அருகே ரூ.8 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆய்வு
காஞ்சீபுரம் அருகே மாகரல்-வெங்கச்சேரி இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடந்தது. அப்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் 7 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதையொட்டி காஞ்சீபுரம் அருகே மாகரல்-வெங்கச்சேரி இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. ரூ.8 கோடி செலவில் கட்டப்படும் இந்த தடுப்பணையை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் முருகு சுப்பிரமணியம், காஞ்சீபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்தையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பணியை விரைவாக முடிக்கும்படி தலைமை என்ஜினீயர் முருகு சுப்பிரமணியம் அறிவுரை வழங்கினார்.