சிங்கபெருமாள் கோவிலில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு
சிங்கபெருமாள் கோவிலில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருடப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பாரதி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீமணவாளன் (வயது 45), இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை திருட்டு
வீட்டுக்குள் பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4½ பவுன் தங்க நகை மற்றும் வீட்டின் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து அவர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.