தூத்துக்குடியில் மீன்வளக்கல்லூரி மாணவர்களுடன் சைலேந்திரபாபு கலந்துரையாடல்

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ- மாணவிகளுடன் ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்துரையாடினார்.

Update: 2018-04-13 22:35 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ- மாணவிகளுடன் ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்துரையாடினார்.

கலந்துரையாடல்

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மாணவ- மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மீன்வளக்கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். மாணவர் சங்க துணைத்தலைவர் சா.ஆதித்தன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார்.

ஆராய்ச்சி

அப்போது அவர் பேசுகையில், அறிவியல் மாணவர்கள் அனைவரும் தங்களின் அறிவுத்திறன் மூலம் உலக அளவில் விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆராய்ச்சி இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம். மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நன்கு படிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து மாணவ- மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் திரளான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் சங்க பொதுச்செயலாளர் செல்வன் சுபாஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்