பாலாறு பழைய பாலம் ரூ.4½ கோடியில் சீரமைப்பு 18-ந் தேதி முதல் போக்குவரத்துக்கு தடை
பாலாறு பழைய பாலம் ரூ.4½ கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் வருகிற 18-ந் தேதி முதல் இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர்-காட்பாடி இடையே பாலாறு ஓடுவதால் வேலூரையும், காட்பாடியையும் இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிக்காக 2 பாலங்கள் உள்ளன. அதில் பழைய பாலத்திற்கு போளூர் சுப்பிரமணியம் பெயரும், மற்றொரு பாலத்திற்கு அண்ணா பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
சித்தூர், காட்பாடி பகுதியில் இருந்து வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் பழைய பாலத்தின் வழியாக வருகின்றன. வேலூரில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் புதிய பாலமான அண்ணாபாலம் வழியாக செல்கின்றன.
பழைய பாலம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாகக்கூறப்படுகிறது. வாகனங்கள் பாலத்தில் செல்லும்போது ஏற்படும் அதிர்வால் பாலத்துக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க பேரிங் என்ற பொருள் பயன்படுத்தப்பட்டது. அதன் ஆயுள்காலம் முடிந்துவிட்டதாகவும், அதனால் அவை பழுதடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.4½ கோடியில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
பணிகள் தொடங்கப்பட இருப்பதை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 31-ந் தேதி வரை பாலாறு பழையபாலத்தில் போக்குவரத்து பயன்பாடு தடை செய்யப்படுகிறது.
அந்த நாட்களில் பாலாறு பழைய பாலத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுவதால், தற்போது வேலூரில் இருந்து காட்பாடி மார்க்கமாக வாகனங்கள் செல்வதற்கு பயன்படுத்தப்படும் புதிய பாலத்தை இரு வழி பாதையாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதியபாலத்தில் கனரக வாகனங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி மார்க்கத்தில் இருந்து, வேலூர் வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காட்பாடியில் இருந்து திருவலம் சென்று சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதேபோல், ஆந்திராவில் இருந்து ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் லத்தேரி, குடியாத்தம் வழியாக செல்ல வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கனரக வாகனங்கள், வேலூர் பாலாற்று பாலத்தை 41 நாட்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.