கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
கல்லூரிகளில் ராக் கிங்கை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தினார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்லூரிகளில் ராக்கிங்கில் ஈடுபட்டால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். இக்குழுக்கள் ராக்கிங் தொடர்பான புகார்களை ஆய்வு செய்து உண்மை தன்மையினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
ராக்கிங்கின் தீமைகள் குறித்து கல்லூரிகளில் புதிதாக சேர்ந்துள்ள மற்றும் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு அறிவிப்பு பலகையில் அவர்களது பெயரை வெளியிட வேண்டும்.
அனைத்து கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் பிரதான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட வேண்டும். புதிதாக சேரும் மாணவர்களுக்கு தனியே இருப்பிட வசதிகள் செய்து கொடுத்திட வேண்டும்.
ராக்கிங் நடைபெறும் கல்லூரி நிறுவனங்களில் பல்கலைக்கழக மானியம் பெறும் தகுதியினை திரும்ப பெற மாவட்ட அளவிலான ராக்கிங் தடுப்புக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ராக்கிங் தொடர்பான புகார்களை மாணவர்கள் பதிவு செய்ய ஏதுவாக இந்திய அரசின் இணையதள முகவரியான www.antiragging.in மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 180 5522 என்ற எண்ணையும், மாணவ- மாணவிகளது அடையாள அட்டையினையும் கல்வி நிறுவன அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
கலெக்டர் அலுவலகத்திற்கு ராக்கிங் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் பெறப்படும் புகார்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சைபுதீன், உதவி கலெக்டர்கள் சரவணமூர்த்தி (கரூர்), விமல்ராஜ் (குளித்தலை) மற்றும் அனைத்து கல்லூரி கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.