32 விவசாய குழுக்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் மானியம் வினியோகம்
மாவட்டத்தில் 32 விவசாய குழுக்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் மானியம் வினியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை பணிகளின் மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசுகையில், “கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 157 ஊராட்சிகளில் அனைத்து துறை அலுவலர்களுடன் குறை கேட்கும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மாவட்ட நிர்வாகம் செயல்படும்” என்றார்.
கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “கோடை காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வினியோகம் தொடர்பாக ஏற்படும் குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத்துறையின் சார்பாக விவசாய ஆர்வலர்கள் குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உபகரணங்கள் மற்றும் இடு பொருட்கள் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 2017-18-ம் ஆண்டில் 32 குழுக்களை சார்ந்த 3,200 விவசாயிகள் ரூ.1 கோடியே 60 லட்சம் மானியம் பெற்றுள்ளனர். இதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி பயன்பெற செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக 2017-2018-ம் ஆண்டிற்கு தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஊராட்சியாக கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையினை குடிநீர் திட்டப்பணிகளை மேம்படுத்தவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளவும் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர். மேலும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய க.பரமத்தி ஒன்றியம், தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், தோகைமலை ஒன்றியம், ஆர்ச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கினர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலையில் கரூர் நகராட்சி 30, 31, 32 மற்றும் 37 ஆகிய வார்டுகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் காளியப்பன், நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.