தானே அருகே சம்பவம்: 92 வயது விவசாயி கொடூர கொலை கொலையாளிகளுக்கு வலைவீச்சு

தானே அருகே 92 வயது விவசாயி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-04-12 22:48 GMT
அம்பர்நாத்,

தானே அருகே 92 வயது விவசாயி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

விவசாயி கொலை

தானே மாவட்டம் கல்யாண் அருகில் உள்ள மோகனே கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவ் ஜாதவ்(வயது92). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் காலை வீட்டு அருகில் உள்ள பகுதியில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் இருந்தன. மேலும் அவரது கண்கள் தோண்டப்பட்டு இருந்தன. அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடக்பாடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார்?

விசாரணையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை மர்மஆசாமிகள் வெளியே தூக்கி வந்து கொலை செய்து வீசி சென்றிருந்தது தெரியவந்தது. இருப்பினும் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வில்லை. நிலப்பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்