ஊரக வேலை உறுதிதிட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கோரி விவசாய மனு அளிக்கும் போராட்டம்
ஊரக வேலை உறுதிதிட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்ககோரி தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
ஊரக வேலை உறுதிதிட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து வரவேற்றார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மல்லையன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் வறுமைக்கு தீர்வு காண வேண்டும். ஊரக வேலை உறுதிதிட்டத்தை கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதேபோல ஊரக வேலை உறுதிதிட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை இணைந்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய செயலாளர் போத்ராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பூபதி, குப்புசாமி, எல்லப்பன், ராஜேந்திரன், சின்னராஜ், மங்கை ஆகியோர் கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினார்்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.