காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்று பேசினார்.
இதில், மாவட்ட செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன், மின் வாரிய ஓய்வுபெற்ற சம்மேளன மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஆயுள் காப்பீட்டு துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி மனோகரன், போஸ்டல் ஓய்வூதியர் சங்க தலைவர் கோபாலன், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முனியன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் சீனிவாசலு, தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ஆதிமூலம், பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்ற அலுவலக மேலாளர் வடிவேல் ஆகியோர் பேசினார்கள்.
கண்டன கோஷங்கள்
முடிவில், மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பு செயலாளர் முனிரத்தினம் நன்றி கூறினார். இந்த தர்ணா போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.