தி.மு.க., கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் 50 பேர் கைது
பிரதமர் மோடி, சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று சென்னைக்கு வருகை தந்தார்.
இவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. வீட்டில் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி, கருப்பு கொடி ஏற்றினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முத்தையன், ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் விழுப்புரம் நகரம் முழுவதும் உள்ள கடைவீதிகளில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக சென்றபடி கருப்பு கொடி ஏற்றினர். அதோடு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் மற்றும் நகர தி.மு.க. அலுவலகத்திலும் கருப்பு கொடி ஏற்றியிருந்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் தாங்கள் வசிக்கும் கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றியதோடு கருப்பு சட்டை அணிந்தவாறு ஊர்வலமாக சென்றனர். மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விடும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சியினர் செஞ்சி கூட்டுசாலை அருகில் ஒன்று திரண்டனர். அப்போது பலூன்களை பறக்க விட போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் கருப்பு பலூன்களை பறக்க விட்டபடி கூட்டு சாலையில் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நகர தி.மு.க. செயலாளர் காஜாநசீர், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொறியாளர் அணி மொக்தியார் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டையில் அனைத்து கம்பங்களிலும், வணிக நிறுவனங்களிலும், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்கள் உள்ளிட்டவைகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடிகளை கட்டினர்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சேரன், ஒன்றிய செயலாளர் தங்க ரமேஷ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் கருப்பு பலூன்களுடன் உளுந்தூர்பேட்டை- திருச்சி சாலையில் நேற்று காலையில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை போலீசார் தடுத்தனர். எனவே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வைத்தியநாதன் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கெடிலத்தில் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையிலும், வளத்தியில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தியாகதுருகத்தில் தி.மு.க. நகர செயலாளர் பொன்ராமகிருஷ்ணன், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி தியாகை நெடுஞ்செழியன், ஒன்றிய நிர்வாகிகள் பெருமாள், அப்துல்கபூர், அப்போலியன், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், நகர நிர்வாகிகள் முரசொலிமாறன், மூர்த்தி, சசிகுமார் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒன்றிய, நகர அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றினர்.
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் உள்பட 43 பேரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.