ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-12 21:30 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங் கப்படும் ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி கோவை- காளப்பட்டி ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப் படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. உடனே போலீசார் அங்குள்ள நேருநகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த ஆட்டோவில் 20 மூட்டைகளில் 1000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர், கோவை மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்த திருமூர்த்தி (வயது 26) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருமூர்த்தியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை கணபதி, சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கும் திருமூர்த்தி, அதை கேரளாவுக்கு கடத்திச்சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் அவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு அதிகமாக இருப்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி திருமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருக்கும் திருமூர்த்தியிடம் அதற்கான நகலை போலீசார் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்