காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையமான சாரதாதேவி பெண்கள் மேல் நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக அரசு அதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை படி 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப் பூதிய பணி காலத்தை பணி வரன் முறைப்படுத்தி, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் விடைத்தாள் திருத்தும் மையமான ஜெயங்கொண்டம் அரசு மேல் நிலைப்பள்ளியில் முன்பு கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கண்ணதாசன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தமிழக பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்பு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார். ராஜேந்திரன், சம்பத், செழியன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். முன்னதாக செயலாளர் கோபிநாதன் வரவேற்றார். முடிவில் தமிழ்மாறன் நன்றி கூறினார்.