முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கருப்பு பட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் அருமுத்துவள்ளியப்பா, தலைமையிட செயலாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் எழிலன், செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நாகமுத்து, தனசேகர், சுந்தரமூர்த்தி, தாமோதரன், திலகர், உமாமகேஸ்வரன், ஜான்பிரான்சிஸ் மார்க்ராஜ், முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டு கருப்பு பட்டை அணிந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு இவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தபடியே பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், அதற்கு சரியான அழுத்தத்தை கொடுக்காத மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசை கண்டித்தும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யாக்கண்ணு வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தொடக்க உரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் கலியமூர்த்தி, சின்ராசு, அண்ணாமலை, இணை செயலாளர்கள் சோமசுந்தரம், பொன்னுசாமி, சிவலிங்கம், சேஷையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கேசவன் நன்றி கூறினார்.