இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியாயினர்.

Update: 2018-04-11 22:54 GMT
காஞ்சீபுரம்,

கர்நாடக மாநிலம், மாலதா அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தா (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார் சத்திரம் அடுத்த பாப்பாங்குழி என்ற கிராமத்தில் வரும்போது அதே திசையில் பின்னால் வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் ஆனந்தா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆனந்தாவின் சகோதரி ராணியம்மாள் சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகையை சேர்ந்தவர் ஜான்வெஸ்லி. இவரது மனைவி மேரி அல்போன்சா (65). இவர் கடந்த 9-ந் தேதியன்று திருவள்ளூருக்கு வேலையின் காரணமாக வந்தார்.

பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு திருவள்ளூர் உழவர் சந்தை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக மேரி அல்போன்சா மீது மோதியது.

விசாரணை

இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்