ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் இந்திராணி முகர்ஜி மீண்டும் சிறையில் அடைப்பு
இந்திராணி முகர்ஜி(வயது46) கடந்த 6-ந் தேதி உடல்நலக்குறைவால் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மும்பை,
ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரது தாயார் இந்திராணி முகர்ஜி(வயது46) கடந்த 6-ந் தேதி உடல்நலக்குறைவால் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனஅழுத்த நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளை அவர் அதிகளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் டாக்டர்களின் சிகிச்சையில் உடல்நலம் தேறியதை அடுத்து இந்திராணி முகர்ஜி நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று மீண்டும் மும்பை பைகுல்லா சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே சிறைச்சாலைக்குள் இந்திராணி முகர்ஜிக்கு எவ்வாறு மாத்திரைகள் கிடைத்தன என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.