கடந்த தேர்தலில் பிடிவாதத்தை தவிர்த்து இருந்தால் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆகி இருப்பார் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

கடந்த சட்டமன்ற தேர்த லில் உத்தவ் தாக்கரே கூட்டணி தொடர்பாக பிடிவாதத்தை தவிர்த்து இருந்தால் அவர் முதல்-மந்திரி ஆகி இருப்பார் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Update: 2018-04-11 22:30 GMT
மும்பை,

கடந்த சட்டமன்ற தேர்த லில் உத்தவ் தாக்கரே கூட்டணி தொடர்பாக பிடிவாதத்தை தவிர்த்து இருந்தால் அவர் முதல்-மந்திரி ஆகி இருப்பார் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இந்துத்வா கட்சிகள் ஒன்றுசேரும்

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான ‘சாம்னா’வுக்காக அதன் ஆசிரியரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் பேட்டி கண் டார். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து கூறியிருப்பதாவது:-

சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேயின் தலைமையில் இருக்கலாம். ஆனால் மறைந்த தலைவர் பாலாசாகேப்பின் கொள்கைகளே அதனை வழிநடத்தி வருகிறது. தற்போதைய சூழலை பார்க்கும் போது மதச்சார்பற்ற இந்துத்வா சக்திகள் அனைத்தும் இயல்பாகவே போலி மதச்சார்பின்மைக்கு எதிராக ஒன்று சேரும். பால் தாக்கரேயும் இதனை தான் விரும்பி இருப்பார்.

உத்தவ் தாக்கரேயின் பிடிவாதம்

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது சிவசேனா-பா.ஜனதா கூட்டணி உடைந்ததற்கு உத்தவ் தாக்கரேயின் பிடிவாதம்தான் காரணம். பா.ஜனதா சார்பில் 147 தொகுதிகள் கொடுக்க சம்மதித்த போதும், மேலும் 4 தொகுதிகள் கூடுதலாக தர மறுத்ததற்கு கூட்டணியை விட்டு விலகினார்.

அவர் மட்டும் இந்த தவறை செய்யவில்லை எனில் இன்றைக்கு சிவசேனா அதிக தொகுதிகளை கைப்பற்றி உத்தவ் தாக்கரேயோ அல்லது நீங்களோ(சஞ்சய் ராவுத்) முதல்-மந்திரியாகி இருக்கலாம்.

இலவச திட்டங்கள் அறிவிக்காதீர்கள்...

பிரதமர் மோடியோ, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவோ மராட்டிய அரசை கட்டுப்படுத்தவில்லை. மக்களை கவர்வதற்காக சாத்தியமற்ற இலவச திட்டங்களை அறிவிக்காதீர் கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாராயணன் ரானே காங்கிர சில் மாற்றாந்தாய் குழந்தை போல நடத்தப்பட்டதாலேயே அவர் பா.ஜனதாவுக்கு வந்து சேர்ந்தார். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கிரிமினல் குற்றவாளிகளை பதவியில் அமர்த்த வேண்டுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்