காவிரி உரிமை மீட்பு பயணம்: மு.க.ஸ்டாலின், நாராயணசாமி பங்கேற்பு

காரைக்கால் மாவட்டத்தில் நடந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2018-04-11 23:00 GMT
காரைக்கால்,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை கடந்த 7-ந் தேதி திருச்சியில் தொடங்கினார். கூட்டணி கட்சிகளுடன் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபயணத்தை தொடர்ந்த அவர், நாகப்பட்டினம் வழியாக நேற்று மதியம் 1 மணியளவில் காரைக்காலுக்கு காரில் வந்தார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுத் தார். பின்னர் மாலை 5 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை அவர் தொடர்ந்தார். முதல் -அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், தி.மு.க. அமைப்பாளர் நாஜிம், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. ஆகியோரும் மு.க.ஸ்டாலி னுடன் சென்றனர்.

இந்த பயணத்தில் தி.மு.க., காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான வர்கள் கலந்துகொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரைக்கால் பஸ் நிலையம் வரை மு.க.ஸ்டாலின் நடந்து சென்றார். அப்போது வழி நெடுகிலும் இருந்த விவசாயிகள் நெற்கதிர்களை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து வரவேற்றனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து நாகை மாவட்டம் பொறையாருக்கு மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டுச் சென்றார். 

மேலும் செய்திகள்