“அ.தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி அழிந்து போகும்” அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் பேச்சு

அ.தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி அழிந்து போகும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எச்.பி. மனோஜ்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2018-04-11 20:45 GMT
நெல்லை, 

அ.தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி அழிந்து போகும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எச்.பி. மனோஜ்பாண்டியன் தெரிவித்தார்.

வக்கீல் அணி கூட்டம்

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம் நெல்லையில் நடந்தது. வக்கீல் அணி தலைவர் பீர்மைதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெனி, இணை செயலாளர் மணிகண்டன், மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் அணி மாவட்ட செயலாளர் திருமலையப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உழைக்க வேண்டும்

அ.தி.மு.க. வக்கீல்கள் திறமையானவர்கள், வக்கீல்களை தான் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்கும். அ.தி.மு.க.வில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மரியாதையும், பதவியும் கட்டாயம் கிடைக்கும். வக்கீல்களுக்கு அரசு பதவிகள் கிடைக்கும். அ.தி.மு.க. வக் கீல்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும். கட்சியில் இளம் வக்கீல்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். நான் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை மீட்க வாதாடும்போது, இந்த இயக்கத்தில் உண்மையான தொண்டர்கள் உள்ளனர். அவர்களை யாராலும் பிரிக்கமுடியாது என்று கூறினேன்.

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறவர்களும், துரோகம் செய்கிறவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். அ.தி.மு.க.விற்கு எதிராக தொடங்கப்பட்ட அனைத்து கட்சிகளும் அழிந்துவிட்டன. அது போல் தற்போது அ.தி.மு.க.விற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள அந்த கட்சியும் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) அழிந்து போகும். அந்த கட்சியை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், இளைஞர் பாசறை இணை செயலாளர் சின்னத்துரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஜெரால்டு (மாநகர்), இ.நடராஜன் (புறநகர்), தலைவர் ஏ.கே.சீனிவாசன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங்சுவாமிதாஸ், முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், சூப்பர்மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் பரமசிவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்